கிருஷ்ணகிரி, ஜூன் 29: கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் லோகநாயகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி அணையின் மூலம் பாசனம் நடைபெறும் பகுதிகளில், நெல் நடவு செய்ய நாற்றங்கால் தயார் செய்யும் பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, விதை விற்பனையாளர்கள் தரமான நெல் விதைகளையே, விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும். மேலும், தாங்கள் விற்பனை செய்யும் விதைக்குவியல்களின் தரமறிந்து, விற்பனை செய்ய வேண்டும். விதை உற்பத்தியாளர்கள் அல்லது மொத்த விற்பனையாளர்களிடமிருந்து, விதை கொள்முதல் செய்யும் போது, விற்பனை பட்டியல்களுடன் விதை முளைப்புத்திறன் பகுப்பாய்வறிக்கையையும் கேட்டு சரிப்பார்க்க வேண்டும்.
பகுப்பாய்வறிக்கை பெறப்படாத விதைக்குவியல்களில் இருந்த பணி விதை மாதிரிகள் எடுத்து, ஒரு விதை மாதிரிக்கு பரிசோதனை கட்டணமாக ரூ.80ஐ செலுத்திள, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் விதைப்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைத்து, பகுப்பாய்வறிக்கையினை பெற்றுக் கொள்ளலாம். விவசாயிகளுக்கு நல்ல தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post விவசாயிகளுக்கு தரமான விதைகளை விற்க வேண்டும் appeared first on Dinakaran.