காஞ்சிபுரம் மாநகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகர திமுக சார்பில், திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கலந்தாலோசனை கூட்டம்‌ நடந்தது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட காஞ்சிபுரம் மாநகர பகுதிகள் 1,2,3,4, திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மற்றும் வாக்குச்சாவடிநிலை முகவர்கள் மற்றும் நிலை முகவர்கள் கூட்டம் கலந்தாலோசனை கூட்டம்‌ அவை தலைவர்கள் குமரேசன், எல்லப்பன், அய்யாவு, மோகனவேல் ஆகியோர் தலைமையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடி பட்டியல் சரிபார்த்தல் என வாக்குச்சாவடி நிலை முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகளுக்கு உறுப்பினர்கள் சேர்த்தல், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் தொகுதி எம்பி செல்வம், மாநில மாணவர் அணி செயலாளர் ஏழிலரசன் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் ஆலோசனை வழங்கி பேசினர். இதில், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், பகுதி செயலாளர் திலகர், சந்துரு, தசரதன், வெங்கடேசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், சிகாமணி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், மண்டல குழு தலைவர்கள் செவிலிமேடு மோகன், சாந்தி சீனிவாசன், சசிகலா கணேஷ், மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், கமலக்கண்ணன், மல்லிகா ராமகிருஷ்ணன், கார்த்திக், இலக்கிய அணி நாத்திகம் நாகராஜன், மகளிர் அணி செல்வி, விஜயா, கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரம் மாநகர திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: