பொதுத்துறை நிறுவன பங்கு விலை நிர்ணயம்

சென்னை: இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்தின் பங்குகளின் விலை ரூ.30 முதல் ரூ.32 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பிரதிப் குமார் தாஸ், சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்துக்கு கடந்த நிதியாண்டில், நிகர வட்டி வருவாய் ரூ.1,323.76 கோடியாக அதிகரித்துள்ளது நிகர லாபம் ரூ.864.62 கோடியாக அதிகரித்தது. இந்த நிறுவன பங்குகளை நவம்பர் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை வாங்கலாம். ஒரு பங்கின் விலை ரூ.30 முதல் ரூ.32 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 460 பங்குகளும் அதன்பின் 460ன் மடங்குகளாக விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பொதுத்துறை நிறுவன பங்கு விலை நிர்ணயம் appeared first on Dinakaran.

Related Stories: