சிக்கல் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு: 12 கவுன்சிலர்களும் ராஜினாமா கடிதத்துடன் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை வலியுறுத்தி 12 கவுன்சிலர்களும் ராஜினாமா கடிதத்துடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றிகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலாடி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கல் ஊராட்சியில் ஆண்டுச்சுக்குளம், பொட்டல்புதூர், தொட்டியபட்டி, கழுநீர்மங்கலம், மதினாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3,500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் ஆண்டுதோறும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் இல்லை என்று கூறி அப்பகுதிகளை சேர்ந்த 12 கவுன்சிலர்களும் ராஜினாமா கடிதத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றிகையிட்டனர்.

காவிரி கூட்டு குடிநீர் இணைப்பு தங்கள் பகுதியில் இல்லை என்பதால் குடிநீர் தட்டுப்பாடு தொடர்வதாக அவர்கள் கவலை தெரிவித்தனர். போராட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் ஆறு பேரும் காலி குடங்களை தலையில் சுமந்தபடி பங்கேற்று எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து சிலர் மொட்டையடித்து எதிர்ப்பு தெரிவிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கு செல்வதற்கே 3 பேருந்துகளில் மாரி மாரி செல்ல வேண்டிய நிலை உள்ளதாக கூறும் கவுன்சிலர்கள் தொடர்ந்து தங்கள் கிராமத்தை அதிகாரிகள் புறக்கணித்து வருவதாக புகார் தெரிவித்தனர்.

The post சிக்கல் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு: 12 கவுன்சிலர்களும் ராஜினாமா கடிதத்துடன் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: