டெல்லியில் பொங்கல் விழா: தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

டெல்லி: அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என்று தமிழில் வாழ்த்து தெரிவித்து பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பேசினார். டெல்லியில் மத்திய இணை மந்திரி எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி, கவர்னர்கள் தமிழிசை சவுந்தரராஜன், சிபி ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எல். முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொங்கல் விழாவில் பேசத்தொடங்கிய பிரதமர் மோடி, அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என தமிழில் கூறினார்.

தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதன் விவரம் பின்வருமாறு:

*புதிய தானியங்களை பொங்கல் திருநாளில் இறைவனுக்கு படைப்பது வழக்கம்

*சிறுதானிய உற்பத்தியில் 3 கோடி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

*சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

*வண்ணமிகு ரங்கோலி கோலத்தை போன்றது நமது நாட்டின் கலாசாரம்’

*ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் இணைந்து செயல்படும்போது நாடு வளம் பெறும்

2047ல் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க உறுதி பூண்டுள்ளோம் என்று பிரதமர் மோடி கூறினார்.

The post டெல்லியில் பொங்கல் விழா: தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: