முதல்வரின் எக்ஸ் பதிவில்:
தை பிறந்தால் வழி பிறக்கும் என நம்பிக்கையளிக்கும் வகையில் மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணம், பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கியுள்ளோம். தமிழ்நாடெங்கும் சமத்துவப்பொங்கல் மகிழ்ச்சியெனப் பொங்கட்டும், அது சமூக வலைத்தளங்களில் எதிரொலிக்கட்டும்.
“நான்தான் எல்லாம்” என்ற சர்வாதிகாரப் போக்கு அகல, கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்கும் ஆட்சி ஒன்றிய அளவில் அமைய வேண்டும். திமுக இளைஞரணியின் சேலம் மாநாட்டில் நாம் எழுப்பும் மாநில உரிமை மீட்பு முழக்கம் டெல்லி வரை அதிரட்டும், கவனச்சிதறல்களுக்கு இடம்கொடுக்காமல் மாநாட்டின் மையநோக்கத்தை முன்னெடுப்போம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
The post தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து appeared first on Dinakaran.