இந்நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகிய 3பேரின் வீட்டில் இருந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் 3 பேரின் வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய 5 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்பட்சத்தில் மீண்டும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மூன்று அரசியல் கட்சி தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ்: தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.