பாமகவில் அதிகாரம் எல்லாம் ராமதாசுக்குதான்: அருள் எம்.எல்.ஏ. திட்டவட்டம்

சென்னை: பா.ம.க.வில் அதிகாரம் எல்லாம் ராமதாசுக்குதான் என அருள் எம்.எல்.ஏ. திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோருக்கு இடையே, கடும் அதிகார மோதல் நடந்து வருகிறது. இரு தரப்பினரும் தாங்கள்தான் உண்மையான பாமக என்று கூறிக் கொள்வதோடு, ஒருவரின் ஆதரவாளரை, மற்றொருவர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்குவது, சேர்ப்பது என கட்சிக்குள் பெரும் குளறுபடி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தைலாபுரம் இல்லத்தில் பாமக எம்எல்ஏ அருள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது; பா.ம.க.வில் அதிகாரம் எல்லாம் ராமதாசுக்குதான். பா.ம.க.வில் பொறுப்பாளர்களை நியமிக்கவோ மாற்றவோ முழு அதிகாரம் படைத்தவர் ராமதாஸ் மட்டுமே. ஜி.கே.மணி உள்ளிட்டோர் தலைவராக இருந்தபோதும் அதிகாரம் ராமதாஸிடம் இருந்தது. தந்தைக்கு கட்டுப்பட மறுக்கும் அன்புமணியின் செயல்பாடு தமிழ்நாடு முழுவதும் பேசு பொருளாகி உள்ளது. அப்பாவை மகன் மதிப்பது தான் தமிழ்நாட்டின் பாரம்பரியம். பதவிக்காக பெற்ற அப்பாவையே அன்புமணி விட்டு போகிறார். அன்புமணி தவறான முன்னுதாரணம் ஆகிவிடுவாரோ என்று பயமாக உள்ளது என்று கூறினார்.

The post பாமகவில் அதிகாரம் எல்லாம் ராமதாசுக்குதான்: அருள் எம்.எல்.ஏ. திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: