×

கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் ஊதிய நிலுவையை டிச. 8க்குள் வழங்க வேண்டும்: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அனைத்து மாநில அரசுகளும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தை, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்ட 2வது தேசிய நீதித்துறை ஊதியக் குழு பரிந்துரையின்படி வழங்க உச்ச நீதிமன்றம் கடந்த மே 19ம் தேதி உத்தரவிட்டது. இதில், நிலுவையில் உள்ள ஓய்வூதியம் உள்பட இதர ஓய்வூதிய பலன்களின் 25 சதவீதத்தை 2023 ஆகஸ்ட் 1ம் தேதி, மற்றொரு 25% 2023 அக்டோபர் 31ம் தேதி, மீதமுள்ள 50 சதவீதத்தை 2023 டிசம்பர் 31ம் தேதிக்கு உள்ளாக செலுத்தும்படி கூறியுள்ளது.

இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் ஊதிய நிலுவையை வழங்காத மாநில அரசுகளின் முதன்மை செயலர்களுக்கு கண்டனம் தெரிவித்தனர். இறுதி வாய்ப்பு வழங்கும் வகையில், வரும் டிசம்பர் 8ம் தேதி அல்லது அதற்கு முன்பு ஊதிய நிலுவையை செலுத்த வேண்டும்.
தவறும் மாநிலங்களின் முதன்மை செயலர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி உத்தரவிட்டனர்.

 

The post கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் ஊதிய நிலுவையை டிச. 8க்குள் வழங்க வேண்டும்: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Dinakaran ,
× RELATED காவலில் இருக்கும் குற்றவாளிகள்...