×

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 12 நாட்களில் ரூ.818.18 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. இது கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகமாகும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் அதிகளவில் மது விற்பனையாகி உள்ளது. செப்டம்பர் 6 முதல் 17ம் தேதி வரை 12 நாட்களில் ரூ.818.21 கோடிக்கு மது வகைகள் விற்பனையாகியுள்ளன.

கடந்த வருடம் இதே நாட்களில் ரூ.809.25 கோடிக்கு விற்பனை நடந்தது. ஓணம் பண்டிகையின் முந்தைய நாளில் மட்டும் ரூ.124 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளன. இது அரசு மதுபானக் கடைகள் மூலம் நடந்த விற்பனையின் கணக்கு மட்டுமே ஆகும். இது தவிர பார்கள், ராணுவம் மற்றும் போலீஸ் கேன்டீன்களில் நடந்த விற்பனை மற்றும் கள்ளுக்கடைகளில் கடந்த விற்பனையையும் சேர்த்தால் தொகை மேலும் அதிகரிக்கும்.

The post ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம் appeared first on Dinakaran.

Tags : ONAM FESTIVAL ,Thiruvananthapuram ,Kerala ,Onam Festivals ,
× RELATED ஓணம் பண்டிகை: கேரளாவில் புகழ்பெற்ற புலிக்காளி ஆட்டம் உற்சாகம்!!