இன்றும், நாளையும் பாஸ்போர்ட் இணையதளம் இயங்காது

சென்னை: இன்றும், நாளையும் பாஸ்போர்ட் சேவை இணையதளம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் (www.passportindia.gov.in) தொழில்நுட்ப பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் இணையதளம் அக்.4ம் தேதி இரவு 8 மணி முதல் வரும் அக்.7ம் தேதி காலை 6 மணி வரை இயங்காது. இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், இணையதளத்தை பயன்படுத்த முடியாது என சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

The post இன்றும், நாளையும் பாஸ்போர்ட் இணையதளம் இயங்காது appeared first on Dinakaran.

Related Stories: