நாடாளுமன்றத்திற்கு 7 முறை தேர்வான எனக்கு ஏன் கேபினட் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை? :கர்நாடக பாஜக எம்.பி. அதிருப்தி!!

பெங்களூரு : தலித்துகளை பாஜக புறக்கணிக்கிறதா? என்று பாஜக மேலிடத்திற்கு கர்நாடக பாஜக எம்.பி. ரமேஷ் ஜிகன்ஜினாகி கேள்வி எழுப்பியுள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலம் விஜயபுரா பாஜ எம்.பி., ரமேஷ் ஜிகஜினாகி, ஏழாவது முறை எம்.பி.,யாக வெற்றி பெற்றார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் முதல் அமைச்சரவையில் குடிநீர் மற்றும் சுகாதார துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். இம்முறை ஒன்றிய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். கிடைக்கவில்லை என்பதால் அதிருப்தி அடைந்தார்.இந்நிலையில், விஜயபுராவில் தன் எம்.பி., அலுவலகத்தை ரமேஷ் ஜிகன்ஜினாகி நேற்று திறந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,”எனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காததால் வருத்தமில்லை. தென்னிந்தியாவில் இருந்து 7 முறை நாடாளுமன்றத்துக்கு தேர்வான ஒரே தலித் எம்.பி. நான்தான். உயர்சாதி எம்.பி.க்களுக்கு கேபினட் பதவி கொடுத்திருக்கிறார்கள். ஆனால், நான் தலித் என்பதால் பாஜக என்னை புறக்கணிக்கிறது. நாடாளுமன்றத்துக்கு 7 முறை தேர்வான எனக்கு ஏன் கேபினட் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை?. தலித்துகளை மட்டும் பாஜக ஆதரிக்காதது ஏன்?. இதனால் எனது மனது வலிக்கிறது. கர்நாடகா பாஜகவில் வில் சிலர், எனக்கு எதிராக செயல்படுகின்றனர். மைசூரு மூடாவில் நடந்த முறைகேடு குறித்து நேர்மையான விசாரணை நடக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post நாடாளுமன்றத்திற்கு 7 முறை தேர்வான எனக்கு ஏன் கேபினட் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை? :கர்நாடக பாஜக எம்.பி. அதிருப்தி!! appeared first on Dinakaran.

Related Stories: