×

பாகிஸ்தானுடன் இந்தியா ஆட கூடாது; ‘‘தேசத்தை விட எந்த கிரிக்கெட் போட்டியும் முக்கியமில்லை”: கவுதம் கம்பீர் பேட்டி

புதுடெல்லி: பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் 26 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற நிலையில், அதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் , பாகிஸ்தான் நாட்டில்உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது ஏவுகணை வீசி தாக்கியது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதால் அந்நாட்டுடன் கிரிக்கெட் போட்டிகளில் ஆடக்கூடாது என பலரும் கூறி வருகின்றனர். இதுபற்றி இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறுகையில், ஐசிசி நிகழ்வுகள் உட்பட பாகிஸ்தானுடன் இந்தியா எந்த கிரிக்கெட் தொடரிலும் விளையாடக்கூடாது என்பது தனிப்பட்ட முறையில் எனது கருத்தாகும்.

எந்த விளையாட்டு, சினிமா அல்லது வேறு எந்த நிகழ்வும் தேசத்தை விட பெரியது அல்ல. ​​இந்தியா அதன் பரம எதிரிக்கு எதிராக விளையாட வேண்டுமா என்பதை அரசாங்கம்தான் முடிவு செய்யும். நாங்கள் பாகிஸ்தானுடன் விளையாடுவதா இல்லையா என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள். நான் இதை முன்பே கூறியுள்ளேன், என்றார்.

The post பாகிஸ்தானுடன் இந்தியா ஆட கூடாது; ‘‘தேசத்தை விட எந்த கிரிக்கெட் போட்டியும் முக்கியமில்லை”: கவுதம் கம்பீர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,Pakistan ,Gautam Kambir ,New Delhi ,Bahalkam ,
× RELATED ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் வீழ்ந்தார் வீனஸ்