×

ஆஷஸ் 5வது டெஸ்ட்: டிராவிஸ் ஹெட் அதிரடி ஆஸ்திரேலியா பதிலடி

சிட்னி: ஆஷஸ் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளான நேற்று, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்திருந்தது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த 4 போட்டிகளில், ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, சிட்னி நகரில் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 211 ரன் குவித்திருந்தது. 2ம் நாளான நேற்று, இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், ஹேரி புரூக், முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடர்ந்தனர். சிறிது நேரத்தில் ஹேரி புரூக் 84 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ரன் எடுக்காமல் வீழ்ந்தார்.

பின் வந்தோரில் ஜேமி ஸ்மித் 46, வில் ஜாக்ஸ் 27 ரன் எடுத்தனர். ஜோ ரூட் மட்டும் அட்டகாசமாக ஆடி 160 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 97.3 ஓவரில் இங்கிலாந்து 384 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ஆஸி தரப்பில் மைக்கேல் நெஸர் 4, மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட் தலா 2 விக்கெட் சாய்த்தனர். பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸி அணியின் துவக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட், ஜேக் விதரால்ட் இணை 57 ரன் சேர்த்த நிலையில், ஜேக் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். பின் வந்த மார்னஸ் லபுஷனே 48 ரன்னுக்கு அவுட்டானார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸி 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் ஆட்டமிழக்காமல் 91 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

Tags : Ashes 5th Test ,Travis Head ,Australia ,Sydney ,Ashes Test ,England ,Ashes ,
× RELATED ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் வீழ்ந்தார் வீனஸ்