×

5 ஆண்டுகள் காத்திருந்து இந்தியரை மணம் முடிக்க எல்லை கடந்த பாக். இளம்பெண்: மேளதாளத்துடன் வரவேற்பு


சண்டிகர்: கொல்கத்தாவை சேர்ந்த இளைஞரை மணம் முடிக்க இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் மணப்பெண்ணுக்கு எல்லையில் மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெர்மனியில் படித்த கொல்கத்தாவை சேர்ந்த சமீர்கான் என்ற இளைஞர் கடந்த 2018ம் ஆண்டு இந்தியா வந்திருந்த போது, அவரது தாயின் மொபைல்போனில் ஜாவேரியாவின் போட்டோவை பார்த்தார்.

பின்னர் அவரையே மணக்க விரும்புவதாக தாயிடம் கூறினார். அவர்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் திருமணம் செய்ய பெரியோர்கள் நிச்சயித்துள்ளனர். திருமணத்துக்காக பாகிஸ்தானின் வாகாவில் இருந்து அட்டாரி எல்லையை கடந்து அவர் நேற்று இந்தியா வந்தார். அங்கு அவருக்கு மணமகன் வீட்டு சார்பில் மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

The post 5 ஆண்டுகள் காத்திருந்து இந்தியரை மணம் முடிக்க எல்லை கடந்த பாக். இளம்பெண்: மேளதாளத்துடன் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Pak ,Chandigarh ,India ,Kolkata ,Germany ,Pakistan ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...