×

16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைத்தளம் பார்க்க தடை: சோனு சூட் வலியுறுத்தல்

மும்பை: பாலிவுட்டின் முன்னணி வில்லன் நடிகர் சோனு சூட், தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் ‘கள்ளழகர்’, ‘ஒஸ்தி’, ‘மதகஜராஜா’ போன்ற படங்களில் அவர் நடித்திருந்தார். கொரோனா லாக்டவுன் காலத்தில் அவர் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகள், இந்திய அளவில் அவருக்கு பாராட்டுகளை குவித்தது. தொடர்ந்து சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுத்து வரும் அவர், தற்போது சமூக வலைத்தளங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சோனு சூட் கூறுகையில்,
‘குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக்காகவும், நாளைய மிகச்சிறந்த இந்தியாவுக்காகவும் நமது குழந்தைகளை கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். ஆஸ்திரேலியா உள்பட சில நாடுகளை போல், இந்தியாவிலும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை உடனடியாக தடை செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் எதிர்மறை விளைவுகளில் இருந்து பாதுகாப்பு தடை செய்வது மிகவும் அவசியமான ஒரு விஷயமாகும்’ என்றார்.

Tags : Sonu Sood ,Mumbai ,Bollywood ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...