×

வெகுதொலைவில் இல்லை; பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் தாமாக இந்தியா திரும்புவார்கள்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், “ஒன்றிய அரசு தன் உத்தி மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான பதிலை மறுவடிவமைப்புடன் மறுவரை செய்துள்ளது. பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை தீவிரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே இருக்கும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் நம்முடையவர்கள். அவர்களை நம் குடும்பத்தின் ஒரு பகுதியாகவே கருதுகிறேன்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் பெரும்பாலானோர் இந்தியாவுடன் ஆழமான தொடர்பை உணர்கிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இந்தியா எப்போதும் இதயங்களை இணைப்பது பற்றி மட்டுமே பேசுகிறது. அன்பு, ஒற்றுமை, உண்மையின் பாதையில் நடப்பதன் மூலம் நம் சொந்த பகுதியான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் திரும்பி வந்து, நான் இந்தியா, திரும்பி வந்து விட்டேன் என சொல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை” என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

The post வெகுதொலைவில் இல்லை; பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் தாமாக இந்தியா திரும்புவார்கள்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி appeared first on Dinakaran.

Tags : India ,Union Minister ,Rajnath Singh ,NEW DELHI ,Delhi ,Union Defence Minister ,Union Government ,Pakistan ,Kashmir ,Dinakaran ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...