ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலூ அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞகர்கள் ராகவாச்சாரி, மணிசங்கர், சதீஷ் பராசரன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

அப்போது அவர்கள் தமிழக அரசு சட்டத்தில் கூறபட்டுள்ள ஒழுங்குமுறைகள் அனைத்தையும், ஒன்றிய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது என்றும், ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு விரோதமாக தமிழக அரசு சட்டம் இயற்ற முடியாது என்றும் வாதிட்டனர். ஏறாளமான கட்டுபாடுகளுடன் ஆன்லைன் விளையாட்டுகள் விளையாட அனுமதிக்கபடுகிறது என்றும், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது தென் மாநிலங்களில் அதிகரித்துள்ளதாக கூறுவதற்கு எந்த புள்ளிவிவரங்களும் இல்லை என்றும் குறிபிட்டனர்.

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அரசுக்கு அறிக்கை அளிக்கும் முன் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கருத்துகளை கோரவில்லை எனவும் முறையான விசாரணை நடத்தாமல், பாரபட்சமாக விசாரணை நடைபெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். திறமை விளையாட்டான ரம்மியை ஆன்லைனில் தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தனி விதிமுறைகளும் சுய கட்டுபாடுகளும் பின்பற்றுவதகவும் அவர்கள் விளக்கமளித்தனர்.

ஆன்லைன் விளையாட்டுகளில் மோசடிக்கு எதிராக போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளதாக தெரிவித்தனர். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடைவிதிப்பது குறித்து ஆய்வு செய்த நீதிபதி சந்துரு குழு 2 வாரங்களில் அரசுக்கு அறிக்கையை சமர்பித்ததாகவும், அந்த அறிக்கை பொதுவெளியில் வெளியிடபடவில்லை என தெரிவித்தனர்.

தொடர்ந்து ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்கு படுத்தும் வகையில் ஒன்றிய அரசு சட்டம் கொண்டுவந்துள்ளதாகவும், ஒன்றிய அரசின் சட்டபடி ஆன்லைன் விளையாட்டுகளில் சூதாட்டம் நடைபெறுவது தடுக்கபடுவதாகம் தெரிவித்தார். ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என்றும் அவர் வாதிட்டார். இதனை அடுத்து தமிழக அரசின் பதில் வாததிற்காக வழக்கு விசாரணையானது ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைதனர்.

The post ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம் appeared first on Dinakaran.

Related Stories: