ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக பேரவையில் நாளை தனித் தீர்மானம் கொண்டு வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வருப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அரசினர் தனி தீர்மானத்தில் 2 முக்கிய தீர்மானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவரவுள்ளார்.

முதல் தீர்மானது ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை எதிர்த்து தனி தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. இந்த தீர்மானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவரவுள்ளார். அந்த தீர்மானத்தை கொண்டுவந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதமானது நடைபெறவுள்ளது.

இதனை தொடர்ந்து 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்போது உள்ள மாநில சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநில எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தொடர்ந்து இருருக்கும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ளவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு தனி தீர்மானம் கொண்டுவரவுள்ளார்.

அந்த தீர்மானத்தில் மக்கள் நலன் கருதி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சமுக பொருளாதார வளர்ச்சி திட்டங்களையும் மக்கள் நல்வாழ்வு திட்டங்களையும் சிறப்பாக நடைமுறை படுத்துவதற்காக தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்க பட்டுவிட கூடாது என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த 2 தீர்மானங்களையும் நாளை தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் கொண்டுவரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

The post ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக பேரவையில் நாளை தனித் தீர்மானம் கொண்டு வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: