×

கமுதி-வெள்ளையாபுரம் சாலையில் குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்

கமுதி, மார்ச் 18: கமுதி- வெள்ளையாபுரம் சாலையில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. கமுதி பகுதியில் இருந்து செங்கப் படை, முதல் நாடு, முஷ்டகுறிச்சி, புதுக்கோட்டை, பாம்புல் நாயக்கன்பட்டி, கோவிலாங்குளம் மற்றும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு
காவிரி கூட்டுக் குடிநீர் பைப் லையன் மூலம் செல்கிறது. இந்த குழாய்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் பல இடங்களில் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.

தற்போது பொதுமக்கள் குடிப்பதற்கு குடிநீர் இல்லாமல் அதிக விலை கொடுத்து குடிநீர் வாங்கி வரும் நிலையில், கடந்த 2 தினங்களாக கமுதி- வெள்ளையாபுரம் சாலையின் நடுவே காவிரி கூட்டுக் குடிநீர் பைப் லையன் உடைந்து ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.
இது பற்றி பொது மக்கள் புகார் அளித்தும், காவிரி கூட்டுக் குடிநீர் வாரிய பணியாளர்கள் இதனை கண்டு கொள்ளவில்லை. குடிநீர் சாலையில் ஓடுவதால் இப்பகுதி முழுவதும் சேரும், சகதியுமாக மாறி இருசக்கர வாகனங்களில் செல்லும் சிலர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே இதற்கு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இதனை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : pipe break ,road ,Kamuthi-Vellayapuram ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி