×

பள்ளிகளுக்கு விடுமுறை பெற்றோர்கள் கலக்கம்

தொண்டி, மார்ச் 17: கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனா உட்பட பல்வேறு நாடுகளில் அதிகளவில் உயிர் பலி ஏற்பட்டுள்ளது, தமிழகத்தில் இப்பாதிப்பு அதிகம் இல்லை என அரசு அறிவித்துள்ள நிலையில், நேற்றிலிருந்து வரும் 31ம் தேதி வரை எல்கேஜி மற்றும் யூகேஜி உட்பட 5ம் வகுப்பு வரையிலும் தொடக்க நிலை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர். இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் கடும் அச்சம்
எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பு இல்லை என்றால் ஏன் விடுமுறை விட வேண்டும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அரசு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இதுகுறித்து நம்புதாளை பகுதி மக்கள் கூறியது, மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிக நாள்கள் பள்ளிகளுககு விடுமுறை விடப்பட்டுள்ளது, மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Tags : Vacation parents ,schools ,
× RELATED கோர்ட் வசனங்களை பேச சிரமப்பட்டேன்: -ஜோதிகா