×

தேவர்குறிச்சியில் தாழ்வாக செல்லும் மின்வயர்கள் அச்சத்தில் பொதுமக்கள்

சாயல்குடி, மார்ச் 17: கடலாடி அருகே தேவர்குறிச்சி, ஒருவனேந்தல் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்வயர்களை சீரமைக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளளர். ஒருவனேந்தல் பஞ்சாயத்து தலைவர் சீதா நாகராஜன் கூறும்போது, ‘‘கடலாடி ஊராட்சி ஒன்றியம், ஒருவனேந்தல், தேவர்குறிச்சி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள முனியசாமி கோயில் தெரு, ஒருவனேந்தல்-முதுகுளத்தூர் சாலையின் ஓரம் உள்ள விவசாய நிலங்களில் மின் வயர்கள் தாழ்வாக செல்கிறது. தொட்டு விடும் தூரத்தில் மிக தாழ்வாக செல்வதால் விவசாய காலத்தில் உழவார பணிகள் முதல் அறுவடை பணிவரை உள்ள விவசாய பணிகளை செய்ய இடையூறாக உள்ளது.

டிராக்டர், அறுவடை இயந்திரம் சென்று வரமுடியவில்லை. முனியசாமி கோயிலுக்கு சாமிகும்பிட நடந்து செல்ல கூட முடியவில்லை. பெண்கள் தலையில் குடங்களை வைத்து தண்ணீர் சுமந்து செல்ல முடியவில்லை. காற்றிற்கு மின்கம்பிகள் அறுந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் விடுமுறை தினங்களில் மாணவர்கள் இப்பகுதியில் விளையாடுகின்றனர், கிராமத்தில் கால்நடைகளும் அதிகமாக உள்ளதால் மேய்ச்சலுக்கு வந்து செல்கிறது. இந்நிலையில் தாழ்வாக தொங்கும் மின்வயர்களால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்ய கடலாடி மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Tags : Electricians ,Devarkurichi ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே...