×

தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு


ராமநாதபுரம், மார்ச் 12:  தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் ஆர்வலர்களுக்கு, தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்ச் செம்மல் விருது, தமிழ் வளர்ச்சி துறையால் 2015ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ் ஆர்வலர்களை தேர்வு செய்து, மாவட்டத்திற்கு ஒருவர் என்ற முறையில் ‘தமிழ்ச் செம்மல்’ விருதும், விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருது தொகையாக ரூ.25 ஆயிரம், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து 2020ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்குரிய விண்ணப்ப படிவத்தை தமிழ் வளர்ச்சி துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருதுக்கான விண்ணப்பப்படிவம் நிறைவு செய்யப்பட்டு ‘தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், ராமநாதபுரம். (தொலைபேசி எண்:04567-232130)’ என்னும் முகவரிக்கு 18.3.2020க்குள் வந்து சேரவேண்டும் என்று கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை