×

வடமாடு மஞ்சு விரட்டு

இளையான்குடி, மார்ச் 6: இளையான்குடி அருகே அய்யம்பட்டியில் மாசி திருவிழாவை முன்னிட்டு, கலுங்கு முனிஸ்வரர் கோயிலில், வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது. கீழக்கரை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ஆகிய ஊர்களிலிருந்து 15 காளைகள் களத்தில் இறங்கி விளையாடியது. சிவகங்கை, மதுரை, தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமார் 150 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்குவதற்காக களமிறங்கினர். நேற்று காலை 10.30 மணி முதல், மாலை 6மணி வரை வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது. மஞ்சு விரட்டை காண சாலைக்கிராமம், வடக்கு சாலைக்கிராமம், வலசைக்காடு, சமுத்திரம், அய்யம்பட்டி, முத்தூர், துகவூர் ஆகிய ஊர்களிலிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொன்டனர். இதில் 15 மாடுபிடி வீரர்களுக்கு, லேசான காயம் ஏற்பட்டது. சுகாதார ஆய்வாளர் மாரியப்பன், மனோஜ் பிரபாகர் தலைமையில் அவசர சிகிச்சை பிரிவு குழவினர் சார்பில், சிகிச்சை அளிக்கப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக சாலைக் கிராமம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Vadamadu Manchu Rebirth ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை