×

பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்வு

சேலம், மார்ச் 5: சேலம் கிருஷ்ணன் கோயில் பகுதியில் ராஜகணபதி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்திற்கு 2 மகளிர், 5 பொது என 7 பேர் நிர்வாக குழு உறுப்பினர்களாக இருப்பார்கள். கடந்த ஆண்டு நடந்த நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, சேலம் ராஜகணபதி பட்டு நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்திற்கு நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 16 பேர் போட்டியிட்டனர். சங்க உறுப்பினர்கள் 271 பேர் வாக்களித்தனர். இதையடுத்து பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. அதில், மூர்த்தி, மோகன், ராஜா, ராஜகோபால், சம்பத், சாரதா, விசாலாட்சி ஆகிய 7 பேர் நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : Silk Linen Weaver Co-operative Association ,
× RELATED கார் மீது அரசு பஸ் மோதி விபத்து