×

சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம், மார்ச் 12: தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சேலம் பழைய நாட்டாண்மை கட்டிடத்தில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாநில தலைவர் மணிவண்ணன் போராட்டத்தை தொடக்கி வைத்தார். பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சண்முகம் கோரிக்கையை விளக்கிப் பேசினார். இதில், மாநில இணை செயலாளர் ரமேஷ் மற்றும் செல்வம், சீனிவாசன், சுரேஷ், அர்த்தனாரி, ராணி, அமராவதி, கிரிராஜன், முத்துக்குமரன், மணிகண்டன், பூபதி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Health Inspectors Association ,Salem ,Federation of Tamil Nadu Health Inspectors Associations ,Deputy Director of ,Health ,Services ,Old National Building ,Prabhakaran ,
× RELATED முழு நேர ரேஷன் கடை திறப்பு விழா