×

பொழுது போக்க இடமில்லாததால் உப்பூரில் பூங்கா அமைக்க வேண்டும் உள்ளாட்சி நிர்வாகம் முன்வருமா?

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 4: ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட உப்பூர் பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கடலூர் ஊராட்சியில் உள்ள உப்பூர் மிகவும் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயம் உள்ள ஊராகும். இங்குள்ள கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்லக் கூடிய ஊராகும். இந்த ஊராட்சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வூரில் ஒரு பூங்கா கூட இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த ஊராட்சியில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கு சிறுவர்கள் விளையாடுவதற்கோ, இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கோ, வயதானவர்கள் மற்றும் பக்தர்கள் பயணிகள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கென்றோ, ஒய்வு எடுப்பதற்கோ ஒரு பூங்கா கூட இங்கு இல்லாமல் உள்ளது. இங்கு ஒரு பூங்கா அமைத்து தர உள்ளாட்சி நிர்வாகம் முன் வரவேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த ஊர் கிராமமாக இருக்தாலும் முக்கியமான கோயில் ஸ்தலம் என்பதால் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், மன அழுத்தம் குறைவதற்கும் பூங்கா போன்ற இடங்கள் சமூகத்திற்கு அவசியமானதாக உள்ளது.

பூங்கா இருந்தால் நடை பயிற்சி செய்பவர்கள் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் நடக்க வேண்டியது இல்லை. இந்த சாலைகளில் நடப்பதற்கே பாதசாரிகளுக்கு நடை பயிற்சியாளர்களுக்கு பயமாகவே நடந்து செல்கின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு விரைவில் பூங்கா அமைத்து தந்து பொதுமக்களின் நலனை காக்க வேண்டும் என்றார்.

Tags : park ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பச்சை ரோஜா மலர்கள்