×

மாசி களரி திருவிழா

சாயல்குடி, மார்ச் 4: முதுகுளத்தூரில் மாசி களரி திருவிழா நேற்று முன்தினம் இரவு கொண்டாடப்பட்டது. முதுகுளத்தூர் கிழக்கு தெருவில் அமைந்துள்ள சுடலை ஊரணி சுடலைமாடன், கருப்பாலுடைய அய்யனார், சுயம்பு தர்ம முனீஸ்வரர் மற்றும் கோயில் வளாகத்திலுள்ள  பரிவார சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது, நள்ளிரவு கோயிலில் சேவல், ஆடுகள் பலியிட்டு, காவு கொடுத்தல் பூஜைகள் நடந்தது. பிறகு சாமி ஆடுதல், பேய் விரட்டுதல் நடந்தது. காலையில் மாவிளக்கு எடுத்தல், பொங்கலிட்டு, கிடாவெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

இதுபோன்று முதுகுளத்தூர் காவல்காரன் சந்து தெருவிலுள்ள தர்மமுனீஸ்வரர் கோயிலில் மாசி களரி மற்றும் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் துவங்கப்பட்டு, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி, நவகிரஹ, மிருத்தஞ்சன, மஹா பூர்ணஹீதி உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தது.

Tags : Masi Kalari Festival ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை