×

போகலூர் ஒன்றியத்தில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா

பரமக்குடி, மார்ச் 3:  போகலூர் ஒன்றியம் சார்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றிய திமுக சார்பாக ஒன்றிய பொருளாளர் குணசேகரன் தலைமையில், போகலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சத்தியா, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பூமிநாதன் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர், சத்திரக்குடி பேருந்து நிலையத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சுந்தரவடிவேல், ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார், மாவட்ட வழக்கறிஞர் துணை அமைப்பாளர் கதிரவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாதவன், குரு சந்திரன், மஞ்சூர் ஊராட்சி செயலாளர் செய்யது முகமதுஉள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Stalin ,Birthday ,
× RELATED மாணவர்களாகிய உங்களுக்கு கல்வி எனும்...