×

சுற்றுலா பயணிகளின் நலனுக்காக ராமேஸ்வரத்தில் மினி பேருந்து வசதி அதிகாரிகளால் ெதாடர்ந்து இழுபறி

ராமேஸ்வரம், மார்ச் 3:  ராமேஸ்வரத்தில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி நகருக்குள் அரசு போக்குரவத்து கழகம் சார்பில் மினி பேருந்துகள் இயக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்லும் ராமேஸ்வரத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் நகர் பேருந்துகள் உள்ளூர் வாசிகளுக்கும், வந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும் போதுமானதாக இல்லை. மேலும் அனைத்து இடங்களுக்கும் தற்போது பெரிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால் மக்கள் அதிகளவில் செல்லும் சில இடங்களுக்கு பேருந்துகளும் இயக்கப்படுவதில்லை. தற்போது ராமேஸ்வரம் நகருக்குள் பேருந்து நிலையத்திலிருந்து கோயில், தனுஷ்கோடி, கெந்தமாதன பர்வதம், தனுஷ்கோடி உள்ளிட்ட பல இடங்களுக்கும், ரயில் நிலையத்திற்கும் அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. மேலும் இருக்கின்ற பேருந்துகளையே நேரம் மாற்றி வேறு வேறு இடங்களுக்கு இயக்குவதால் ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அதிக பணம் கொடுத்து ஆட்டோவில் செல்ல வேணடிய நிலை உள்ளது.

ஆட்டோ கட்டணமும் முறையாக நிர்ணயம் செய்யப்படாததால் தமிழகத்திலேயே  இல்லாத அளவிற்கு ராமேஸ்வரம் நகரில் ஆட்டோ கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வேறு வழி இல்லாததால் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையை தவிர்ப்பதற்கு ராமேஸ்வரம் நகருக்குள் அமைந்துள்ள அனைத்து சாலைகளிலும் செல்லும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் மினி பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராமேஸ்வரம் நகர் பகுதிக்குள் 20 மினி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகமும், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளும் மாறி மாறி தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஆண்டு தோறும் பெரிய நகரங்களில் புதிது புதிதாக மினி பேருந்துகள், சொகுசு பேருந்துகள், விரைவு பேருந்துகள் என அறிமுகப்படுத்தி பேருந்துகளை இயக்குவதில் அரசு போக்குவரத்து கழகங்கள் போட்டி போட்டு செயல்படுகின்றன.

ஆனால் பல மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் அதிகளவில் வந்து செல்லும் ராமேஸ்வரம் நகரில் மட்டும் பழைய பேருந்துகள் மட்டும் இன்று வரை இயக்கப்பட்டு வருகின்றன. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இதனை மாற்றியமைக்க எவ்வித அக்கறையும் காட்டவில்லை. அறிவிக்கப்பட்ட மினி பேருந்து இயக்கமும் இதுநாள் வரை செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் அன்றாடம் ராமேஸ்வரம் நகருக்குள் பல இடங்களுக்கும் சென்று வர உள்ளூர்வாசிகள், சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையில் உடனடியாக மினி பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். அரசு போக்குவரத்து கழகத்தில் ராமேஸ்வரம் நகருக்குள் முதல்கட்டமாக  நான்கு மினி பேருந்துகளை உடன் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், நான்கு பேருந்துகளும் தயாராக இருப்பதாகவும், போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் இதற்கான உத்தரவில் கையெழுத்து போடாததால் இத்திட்டத்தினை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து கழக ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : bus facility ,Rameshwaram ,
× RELATED இனி மணலில் நடக்க தேவையில்லை தனுஷ்கோடி...