×

புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை, மார்ச்3: தமிழக அரசால் தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற பல திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் தேவைகளை அறிந்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் வாரந்தோறும் திங்கள்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்துகொள்ளும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. நேற்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து விலையில்லா வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல்.

குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கி கடன், பசுமைவீடு, சாலைவசதி, குடிநீர்வசதி, முதியோர் உதவித்தொகை, திருநங்கைகளுக்கான வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 450 மனுக்கள் வரப்பெற்றன. வரப்பெற்ற மனுக்களை தொடர்புடைய அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய்த்துறையின் சார்பில் கருணை அடிப்படையில் மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக முத்தமிழ்செல்வி என்பவருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED புதுக்கோட்டையில் இரண்டு நாட்களாக மழை