×

புலிவலம் ஊராட்சியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு

திருமயம், ஜன.12: திருமயம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் ரகுபதி பயனாளிகளுக்கு வழங்கினார். தமிழக அரசு தமிழர் பண்டிகையான பொங்கல் திருநாளை அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, கரும்பு, வெள்ளம் உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பானது அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது பொது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் போது ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக பயனாளிகளுக்கு டோக்கன் முறை மூலம் தொகுப்புகள் வழங்க அறிவுறுத்தப்பட்டு கடந்த 8ம் தேதி முதல் பொங்கல் பரிச தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே பொங்கல் தொகுப்பானது பயனாளிகளுக்கு அந்தந்த பகுதியில் உள்ள முக்கியஸ்தர்கள் மூலம் தொடக்க விழா நடைபெற்று விநியோகம் செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் திருமயம் அருகே உள்ள புலிவலம் ரேஷன் கடையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கி விழா தொடங்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட அவைத்தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் சிதம்பரம், கணேசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் கருப்பையா, கலை மற்றும் இலக்கிய அணி மேகநாதன், பொறியாளர் அணி ராமசாமி, இளைஞர் அணி அருண்சேகர், விவசாய அணி சிவகுமார், மாணவரணி கார்த்திக் குமார், முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியன், தொண்டரணி சாமி சுரேஷ் உள்ளிட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகள், அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu government ,Pulivalam panchayat ,Thirumayam ,Minister ,Raghupathi ,Tamil ,festival ,Pongal ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை