- மேலைச்சிவபுரி கல்லூரி
- பொன்னமராவதி
- தாசில்தார் சாந்தா
- உல்லால் மேலைச்சிவபுரி கல்லூரி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இயற்கை வளங்கள்
- அமைச்சர்
- ரகுபதி…
பொன்னமராவதி,ஜன.10: பொன்னமராவதி அருகே உளள் மேலைச்சிவபுரி கல்லூரியில் தாசில்தார் சாந்தா கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரி மாணவர்களுக்கு திருமயம் அரசு கலைஅறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு இயற்கைவளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கி தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து மேலைச்சிவபுரி கணேசர் கலைஅறிவியல் கல்லூரியில் பொன்னமராவதி தாசில்தார் சாந்தா 186 மாணவ,மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கினார். இதில் கல்லூரி முதல்வர் பழனியப்பன், சன்மார்க்க சபை நிர்வாகிகள்,கல்லூரிக்குழு நிர்வாகிகள்,பேராசிரியர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டனர்.
