×

நார்த்தாமலையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

இலுப்பூர், ஜன.10: அன்னவாசல் அருகே நார்த்தாமலையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3ஆயிரம் வழங்கப் படும் நிகழ்வு நடைபெற்றது. நார்த்தாமலை ரேஷன் கடையில் அன்னவாசல் வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் மாரிமுத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு தொகுப்புடன் ரூ.3ஆயிரம் வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பழனிச்சாமி, மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் சண்முகம், முன்னாள் நார்த்தாமலை ஊராட்சி மன்ற தலைவர் பால்ராஜ், மக்கள் நலம் மாரிமுத்து, ஊர் முக்கியஸ்தர்கள் சங்கரன்,மணிமாறன், ஜல்லிக்கட்டு வர்ணனையாளர் ஷாஜகான் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

Tags : Narthamalai ,Ilupur ,Annavasal ,North DMK Union ,Marimuthu ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி