- கலெக்டர்
- அழகன்வயல் கிராமம்
- புதுக்கோட்டை
- மாவட்ட கலெக்டர்
- அழகன்வயல்
- மணமேல்குடி தாலுகா
- புதுக்கோட்டை மாவட்டம்
- அறந்தாங்கி வருவாய் கோட்டம்
புதுக்கோட்டை, ஜன.10: மணமேல்குடி தாலுகா, அழகன்வயல் வருவாய் கிராமத்தில் 21ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வருவாய்கோட்டம், மணமேல்குடி தாலுகா, அழகன்வயல் வருவாய் கிராமத்தில் வருகிற 21.01.2026 அன்று காலை 10 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு 12.01.2026 அன்று முதல்பொது மக்களிடமிருந்து முன்மனுக்கள் அழகன்வயல் வருவாய் கிராமத்தில் உள்ள பிஎம்எஸ் திருமண மண்டபத்தில் நடை பெறவுள்ளதால் தங்கள் கோரிக்கை தொடர் பாக மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
