×

தொட்டியம்பட்டி ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்

பொன்னமராவதி,ஜன.9: பொன்னமராவதி அருகே தொட்டியம்பட்டி ஊராட்சியில் திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. தமிழக இயற்கை வளங்கள்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் மாநில மருத்துவரணி இணைச்செயலாளர் அண்ணாமலை முன்னிலையில் திருமயம் சட்டமன்ற தொகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டி ஊராட்சியில் இந்திராநகர் மற்றும் தொட்டியம்பட்டி ஆகிய இடங்களில் திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் மாவட்டப் பிரதிநிதி சிக்கந்தர், நிர்வாகிகள் ஆலவயல் முரளிசுப்பையா, தியாகராஜன், லோகநாதன், சாமிநாதன், அரவிந்த், மற்றும் திமுக மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Thottiyampatti panchayat ,Ponnamaravathi ,DMK ,Thottiyampatti ,Thirumayam assembly ,Tamil Nadu ,Natural Resources Minister ,Raghupathi ,State Medical Officer ,Joint Secretary ,Annamalai ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி