×

ராமநாதபுரம் வருகை தந்த முதல்வருக்கு அதிமுகவினர் வரவேற்பு

பரமக்குடி, மார்ச் 2: ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்ட வந்த முதலமைச்சர் மற்றும் துணை முதல்வருக்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பளித்தனர். ராமநாதபுரம் வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுந்தன்வயல் பகுதியில் மாவட்ட செயலாளர் முனியசாமி, ராமநாதபுரம் எம்எல்ஏ மணிகண்டன், பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஈசிஆர் சாலையில் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பால்பாண்டியன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரியனேந்தல் கிராமத்தில் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சரயு ராஜேந்திரன் தலைமையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி, அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் அன்வர்ராஜா, மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர், பரமக்குடி ஒன்றிய செயலாளர் முத்தையா, நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் குப்புசாமி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பால்பாண்டியன், ராமநாதபுரம் நகர் துணைச் செயலாளர் ரத்தினம், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிந்தாமணி முத்தையா, ஒன்றியக்குழு துணைத்தலைவர் சரயு ராஜேந்திரன், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வனிதா குப்புச்சாமி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஜெயபாலன், பட்டணம் காத்தான் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா மருது,
பரமக்குடி நகர அம்மா பேரவை செயலாளர் வடமலையான், மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டியன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கண்ணன், கமுதி ஊராட்சி ஒன்றியத்தின் எருமகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, துணைத்தலைவர் மணிகண்டன், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்ட மூத்த துணைத்தலைவர் டாக்டர் மலையரசு, தலைவர் டாக்டர் சிவக்குமார் பொருளாளர் டாக்டர் மனோஜ்குமார், செயலாளர் டாக்டர் முத்தரசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், சிறுபான்மையர் பிரிவு மாவட்ட பொருளாளர் அப்துல் மாலிக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : visit ,Ramanathapuram ,
× RELATED எப்ப வந்த.. நல்லா இருக்கியாப்பா.....