×

இன்று பிளஸ்2 தேர்வு மாவட்டத்தில் 14 ஆயிரத்து 765 பேர் எழுதுகின்றனர்: 120 பறக்கும் படை அமைப்பு

சாயல்குடி, மார்ச் 2: இன்று தொடங்க உள்ள பிளஸ்2 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 765 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். மாணவர்களை கண்காணிக்க 120 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2019-20 ஆண்டுக்கான பிளஸ்2 தேர்வு இன்று தொடங்குகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 14 ஆயிரத்து 765 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வெழுதும் மாணவ, மாணவியருக்காக மொத்தம் 56 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள்கள் 6 மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வை கண்காணிக்க மாநில பள்ளிக் கல்வி துறை இணை இயக்குனர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வு மையங்களில் முறைகேடு நடைபெறாமல் இருக்கும் வகையில் கண்காணிக்க 120 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் காலை 9 மணிக்குள் வந்துவிட வேண்டும், தேர்வு மையத்திற்குள் பேனாவை தவிர வேறு எந்த பொருளையும் எடுத்து வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வையொட்டி அனைத்து தேர்வு மையங்களிலும், மின்சாரம், கழிப்பிடம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 2: ஆர்.எஸ்.மங்கலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஆர்.எஸ்.மங்கலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், சட்டத்தை திரும்ப பெறக்கோரியும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு கிளை தலைவர் அகமதுகனி தலைமை வகுத்தார். ஜமாத் தலைவர் அன்வர்தீன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் அப்துல் கரீம் குடியுரிமை சட்டம் பற்றி சிறப்புரையாற்றினார்.

அப்போது கூட்டத்தில் பேசியவர்கள், தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட சட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து இச்சட்டத்தை எதிர்த்து போராட ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மத்திய அரசு இச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பேசி தங்களின் கண்டனங்களை வெளிபடுத்தினர். இந்த கண்டன பொது கூட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் கலந்து
கொண்டனர்.

Tags : exam district ,120 Flying Squadron Organization ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டித் தேர்வு மாவட்டத்தில் 4359 பேர் எழுதினர்