×

க.பரமத்தி அடுத்த சூடாமணி மாசாணியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

க.பரமத்தி, பிப்.11: க.பரமத்தி அருகேயுள்ள சூடாமணி மாசாணியம்மன் கோயிலில் தீமிதி விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேண்டுதல்களை நிறைவேற்றினர். கரூர் சின்னதாராபுரம் நெடுஞ்சாலையில் சூடாமணி மாசாணியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திவிநாயகர், கருப்பண்ணசுவாமி, ஏழு கன்னிமார்களான அபிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி, துர்க்கை, பேச்சியம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளன.இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மக திருவிழா விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டு விழா கடந்த தை அமாவாசையன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களால் 24ம் ஆண்டு பூக்குழி (தீமிதி) திருவிழா நடத்த தேதி நிச்சயிக்கபட்டு மாசாணி அம்மனுக்கு கங்கணம் கட்டப்பட்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினசரி மாசாணியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி (குண்டம்) விழாவில் பங்கேற்க 300 பேருக்கு கங்கணம் கட்டப்பட்டு விரதம் தொடங்கினர். தொடர்ந்து சக்தி கரகம் பாலிக்கப்பட்டு வாணவேடிக்கையுடன் ஆனமலையில் இருந்து புனிதநீர் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு மாசாணியம்மனுக்கு பல்வேறு பூஜைகள் செய்தனர்.

கடந்த 8ம்தேதி அம்மனுக்கு நகை மற்றும் அலங்கார பொருட்களை மேளதாளம் முழங்க கொண்டு வரப்பட்டு பூக்குழி குண்டம் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. 9ம்தேதி காலை எல்லைமேட்டில் இருந்து அக்னி கரகம், சக்தி அழகு கரகம் மற்றும் பெண்கள் அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக வந்து கங்கணம் கட்டிய 300பக்தர்கள் பூக்குழியில் இறங்கி வேண்டுதல்களை நிறைவேற்றினர். அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று (10ம் தேதி) மாசாணி அம்மனுக்கு மறுபூஜை நடைபெற்றதுடன் விழா நிறைவடைகிறது.

Tags : festival ,Sudamani Masaniamman ,K.Paramathi ,
× RELATED ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!