×

குளித்தலையில் முதுகு தண்டுவட மாற்று அறுவை சிகிச்சை இலவச மருத்துவ முகாம்

குளித்தலை, மே 19: குளித்தலை லயன் சங்கம் மற்றும் கிராமியம் தொண்டு நிறுவனம் திருச்சி அட்லஸ் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் கிராமியம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. முகாமிற்கு குளித்தலை லயன் சங்க தலைவர் வலையபட்டி அசோக்குமார் தலைமை வகித்தார். மருத்துவ முகாமை கிராமியம் இயக்குனர் டாக்டர் நாராயணன் தொடங்கி வைத்தார். இதில் இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, கழுத்து தண்டுவட அறுவை சிகிச்சை, முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, ஆர்த் ரோஸ் கோபி அறுவை சிகிச்சை, முதுகு தண்டுவட அறுவை , சிகிச்சை எலும்பு புற்றுநோய் அறுவை , குடல் புற்றுநோய் அறுவை, சர்க்கரை நோய் பாத, பிச்சப்பை கல் சிறுநீரக கல் , லேப்ராஸ்கோபி , குடலிறக்கம் , விரை வீக்கம் மூலம் மார்பக கட்டிகள் கர்ப்பப்பை கட்டிகள் கல்லீரல் கணையம் போன்ற சிகிச்சைகளுக்கு மருத்துவமனை மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கி மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

முகாமில் 125 பேருக்கு மேல் கலந்து கொண்டு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றனர். இம் முகாமில் லயன் சங்க செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் மாணிக்கம், முன்னாள் லயன் சங்க தலைவர்கள் நல்லுசாமி ராஜா, ஜோதி துரைராஜ், மாயவன், தனபால் ராஜா, இன்றைய கவுன்சிலர் சத்யா குட்டி மோகன், கவிஞர் முகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post குளித்தலையில் முதுகு தண்டுவட மாற்று அறுவை சிகிச்சை இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Cord ,Khuthalai ,Kulithalai ,Kulithalai Lion Society ,Gramiyam Charitable Organization ,Trichy Atlas Hospital ,Gramiyam Koota Hall ,Kulithalai Lion Sangh ,President ,Valayapatti Ashokumar ,
× RELATED குளித்தலை நீதிமன்ற வளாகத்தில் உலக...