×

வேலாயுதம்பாளையத்தில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

வேலாயுதம்பாளையம், மே 15: தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகள் தற்காப்பு கலை கற்க அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் கராத்தே பயில்வதில் மாணவர்கள் நல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் அடிப்படையில் வேலாயுதம்பாளையம் பகுதியில் கராத்தே பயிற்சிக்கு தனி முக்கியத்துவம் வழங்கி தினசரி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இதன்படி கரூர் மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கருப்பு பட்டை , முதுநிலை கருப்பு,பட்டை வண்ணப்பட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி புகளூரில் நடைபெற்றது. இதில் 130க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வண்ணப்பட்டைகளுக்குகான காரத்தே தேர்வில் கலந்து கொண்டனர். கருப்புபட்டை பெற்ற மாணவர்களை தமிழ்நாடு ஸ்போர்ட்ஷ் கராத்தே டெக்னிக்கல் டைரக்டர் தாய் சென்சாய் ராஜசேகரன் மற்றும் கரூர் மாவட்ட கராத்தே சங்கத்தின் செயலாளர் ரென்சி செந்தில்குமார் மற்றும் சீனியர் மாணவர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

The post வேலாயுதம்பாளையத்தில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி appeared first on Dinakaran.

Tags : Level ,Velayuthampalayam ,Tamil Nadu ,Karur ,Dinakaran ,
× RELATED பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தில்; தொழில் முனைவோர் பயிற்சி