×

நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு கோடை கால கூடைப்பந்து பயிற்சி நிறைவு விழா

கரூர், மே 16: கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் கோடை கால இலவச பயிற்சி முகாம் கடந்த 40 நாட்களாக நடைபெற்றது. பயிற்சி முகாம் மாவட்ட கூடைப்பந்து கழக சேர்மன் தனபதி தலைமையிலும், தலைவர் கார்த்தி முன்னிலையிலும் நடைபெற்றது. நிறைவு விழாவுக்கு துணைத்தலைவர் வீர திருப்பதி வரவேற்றார். இந்த விழாவில், நிறைவு விழாவில், கரூர் மாநகராட்சி துணை மேயர் சரவணன், டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், மாநகராட்சி உறுப்பினர் சாந்தி பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு, பயிற்சி பெற்றவர்களுக்கு இலவச சீருடை, சான்றிதழ்கள் போன்றவற்றை வழங்கி பேசினர். இந்த பயிற்சி முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். கூடைப்பந்து கழக செயலாளர் செந்தில் நன்றி கூறினார். இந்த முகாமில், அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

The post நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு கோடை கால கூடைப்பந்து பயிற்சி நிறைவு விழா appeared first on Dinakaran.

Tags : Summer ,Karur ,Karur District Basketball Association ,District Basketball Association ,Dhanapati ,President ,Karthi ,Dinakaran ,
× RELATED சிவகங்கை பூங்காவில் கோடை விழா துவக்கம்