×

₹13.78 கோடியில் நான்கு வழிச்சாலை

கரூர், மே 19: இருசக்கர வாகனங்கள் செல்ல தனி பாதையுடன் ரூ.13.78 கோடியில் 4 வழிச்சாலை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது பணிகளை தணிக்கை குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். தரம் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும் என்று குழுவினர் கூறினர். கரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கரூர், ஈரோடு சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவு படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். முதற்கட்டமாக புன்னம்சத்திரம் அதன் சுற்றுப்புற பகுதியில் நான்கு வழி சாலையாக பணி நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் இரு வழி சாலையை 4 வழிச்சாலையாக மாற்றுதல், இருவழிச் சாலையை கூடுதலாக இருசக்கர வாகனம் போவதற்கு தனி பாதை அமைத்தல் மற்றும் சாலை மேம்பாட்டு உள்பட மொத்தம் ரூ.13.78 கோடி மதிப்பில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

கரூர் ஈரோடு சாலை புன்னம்சத்திரம் பகுதியில் 3.6 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரண்டு வழி சாலை 4 வழி பாதையாக ரூ.9 கோடி மதிப்பிலும், நொய்யல் பகுதியில் 1.7 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2 வழி பாதை விரிவுபடுத்தப்பட்டு 2 சக்கர வாகனம் செல்வதற்கு வசதியாக ரூ.3.62 கோடி மதிப்பிலும், முத்துரங்கம் பட்டியில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை மேம்பாட்டு பணி ரூ.1.16 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. மொத்தமாக ரூ.13.78 கோடி மதிப்பில் நடைபெறும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு நடைபெற்று வரும் பணிகளை ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு பகுதியில் உள்ள பிற தணிக்கை குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்து அதன் தரம் குறித்து அரசுக்கு தெரிவிப்பதுண்டு. அதன் அடிப்படையில் முடிக்கப்பட்ட பணிகளை அடிப்படையில் இப்பணிகளை முடிக்கப்பட்ட பணிகளை சேலம் நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் வட்ட கண்காணிப்பு பொறியாளர் பழனியப்பன் தலைமையில் கோட்டப் பொறியாளர் சரவணன் உள்ளிட்ட உள்தணிக்கை குழு ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது திருப்பூர் தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கரூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
 தணிக்கை குழுவினர் நேரில் கள ஆய்வு
 தரம் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும்
இருசக்கர வாகனங்கள் செல்ல தனி பாதையுடன்
புன்னம்சத்திரம் பகுதியில் 3.6 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரண்டு வழி சாலை 4 வழி பாதையாக ரூ.9 கோடி மதிப்பிலும், நொய்யல் பகுதியில் 1.7 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2 வழி பாதை விரிவுபடுத்தப்பட்டு 2 சக்கர வாகனம் செல்வதற்கு வசதியாக ரூ.3.62 கோடி மதிப்பிலும், முத்துரங்கம் பட்டியில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை மேம்பாட்டு பணி ரூ.1.16 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.

The post ₹13.78 கோடியில் நான்கு வழிச்சாலை appeared first on Dinakaran.

Tags : Karur ,Karur… ,Four lane road ,Dinakaran ,
× RELATED கரூர் அரசு மருத்துவக் கல்லூரி எதிரே பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?