×

(தி.மலை) விவசாயி கொலை வழக்கில் அதிமுக பிரமுகருக்கு ஆயுள் தண்டனை ஆரணி நீதிமன்றம் தீர்ப்பு >

ஆரணி, டிச.18: விவசாயி கொலை வழக்கில் அதிமுக பிரமுகருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆரணி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தூசி அருகே உள்ள மகஜனபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சீனு(எ)சீனுவாசன்(53), அதிமுக பிரமுகர். கடந்த 21.9.2008ம் தேதியன்று இவரது உறவினர் பெருமாளின் இறுதிச்சடங்கு அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் நடந்தது. அப்போது, அதே பகுதியை சேர்ந்த விவசாயி குப்பன்(55), அவரது மகன் அருள்பிரகாஷ் ஆகிய இருவரும் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். சடலத்தின் மேல் இருந்த அதிமுக கொடியை குப்பன் அகற்றினாராம். இதனை சீனுவாசன் தட்டிக்கேட்டதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரி தாக்கி கொண்டனர். அப்போது, சீனுவாசன் அருகில் இருந்த கல்லை எடுத்து, குப்பன் தலையிலும், அவரது மகனை கட்டையாலும் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த குப்பன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் தூசி போலீசார் வழக்குப்பதிந்து சீனுவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கு விசாரணை ஆரணி கூடுதல் மாவட்ட அமர்வு மற்றும் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நேற்று நீதிபதி கணேசன் விசாரித்து சீனுவாசனுக்கு ஆயுள் தண்டனை, ₹10 ஆயிரம் அபராதமும், குப்பனையும், மகனையும் ஆயுதங்களால் தாக்கிய குற்றத்திற்காக 6 மாத கடுங்காவல் தண்டனையும், ₹ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

Tags : court ,
× RELATED புழல் மத்திய சிறையில் செயல்படும்...