×

(தி.மலை) தையல் வகுப்புக்கு சென்ற இளம்பெண் கடத்தலா? போலீஸ் விசாரணை

 

பெரணமல்லூர், மே 29: பேரணமலூர் அருகே தையல் வகுப்புக்கு சென்ற இளம்பெண் கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் பட்டப்படிப்பு முடித்துள்ளார். மேலும் நாள்தோறும் செய்யாறு பகுதியில் தையல் வகுப்பு சென்று விட்டு மதியம் 2 மணிக்கு வீடு திரும்புவது வழக்கமாம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தையல் வகுப்புக்கு சென்ற இளம்பெண் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக உறவினர் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தும் தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இதனையடுத்து நேற்று மாலை இளம்பெண்ணின் தந்தை பெரணமல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து இளம்பெண்ணை யாராவது கடத்தி சென்றார்களா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரித்து தேடி வருகின்றனர்.

 

The post (தி.மலை) தையல் வகுப்புக்கு சென்ற இளம்பெண் கடத்தலா? போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Th. Malai ,Peranamallur ,Tiruvannamalai district ,T. Malai ,Dinakaran ,
× RELATED (தி.மலை) வீட்டிலிருந்து வெளியேறிய...