×

₹1.5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு செங்கம் அருகே பரபரப்பு டாஸ்மாக் கடை ஜன்னல் உடைத்து

செங்கம், ஜூன் 1: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று பகல் 12 மணிக்கு கடை திறப்பதற்கு சேல்ஸ்மேன் காமராஜ் வந்தார். அப்போது கடையின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையை திறந்து பார்த்தபோது ₹1.50 லட்சம் மதிப்பிலான உயர் ரக மதுபாட்டில்களை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த செங்கம் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில் சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கும் கழற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். டாஸ்மாக் கடை ஜன்னல் உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ₹1.5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு செங்கம் அருகே பரபரப்பு டாஸ்மாக் கடை ஜன்னல் உடைத்து appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Sengam ,Venkatesapuram ,Thiruvannamalai district ,Kamaraj ,Dinakaran ,
× RELATED செங்கம் செய்யாற்றில் ஆக்கிரமிப்புகள்...