×

முத்துப்பேட்டையில் காணிக்கை அன்னை ஆலய தேர்பவனி

கீழக்கரை, பிப்.4:  முத்துப்பேட்டையில் புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் கடந்த மாதம் 24ம் ேததி கொடியேற்றத்துடன் திருப்பலி துவங்கியது. அன்று முதல் நேற்று வரை உள்ள நவ நாட்களில் ஒவ்வொரு தலைப்பிலும் பைபிளில் உள்ள மறையுரை நிகழ்ச்சி நடந்தது. இதில் பரமக்குடி, சிவகங்கை, பெரியசாமிபுரம், புளியால், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த பங்கு தந்தையர்களின் ஆன்மிக சொற்பொழிவும், திருப்பலி, பிரார்த்தனையும் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சிறப்பு திருப்பலியும், ஜெபமும், மன்றாட்டுதலும் நடந்தது. விழாவில் இரவு 10 மணியளவில் சர்ச்சில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனித காணிக்கை அன்னையின் சொரூபம் தேர்பவனியில் ஆண்களும், பெண்களும் வடம் பிடித்து இழுத்த வண்ணம் சென்றனர். இயேசு கிறிஸ்துவின் துதிப்பாடல்களும், இறைவசனங்களையும் வாசித்தபடி சென்றனர். முத்துப்பேட்டை பகுதி முழுவதும் வண்ண மின்னொளி விளக்குகளால் விழாக்கோலமாக இருந்தது. நேற்று காலையில் நிறைவு திருப்பலியும், நற்கருணை பவனியும், அன்னதானமும் நடகந்தது. ஏற்பாடுகளை முத்துப்பேட்டை பங்குத்தந்தை, பங்குப்பேரவை, அன்பியப் பொறுப்பாளர்கள் மற்றும் இறைமக்கள் குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Muttupettai Tribute to Mother Temple ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை