×

ராமேஸ்வரம் கோயிலில் சிறப்பு பூஜை,பொது விருந்து

ராமேஸ்வரம், பிப்.4:  ராமேஸ்வரம் கோயிலில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் பொது விருந்து நடைபெற்றது. அண்ணா நினைவு நாளை முன்னிட்டு நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பகல் 12 மணிக்கு ராமநாத சுவாமி சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து கோயில் தெற்கு கோபுரம் அருகில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நினைவு நாளையொட்டி பொது விருந்து நடைபெற்றது.
கோயில் தக்கார் குமரன்சேதுபதி, உதவி கமிஷனர் ஜெயா, மேலாளர் முருகேசன், அதிமுக நகர்கள் செயலாளர் அர்ச்சுணன், திமுக நகர் செயலாளர் நாசர்கான், பா.ஜ. மாவட்ட செயலாளர் முரளீதரன் உட்பட 300க்கும் மேற்ப்ட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பொது விருந்தில் பங்கேற்றனர்.

Tags : pooja ,feast ,Rameswaram Temple ,
× RELATED வேதாள முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்