×

தேவிபட்டிணத்தில் அறிவுத்திறன் போட்டி

சாயல்குடி, ஜன.30: தேவிபட்டிணத்தில் கலாம் மாணவர்கள் இயக்கம் சார்பில் அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது. தேவிபட்டிணம் அரசு மேல்நிலை பள்ளியில் கலாம் மாணவர்கள் இயக்கம் சார்பில், மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது. பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவிற்கு கலாம் மாணவர்கள் இயக்க தலைவர் விஜேந்திர ராஜா தலைமை வகித்தார். தேவிபட்டிணம் பஞ்சாயத்து தலைவர் ஹமிதீயா ராணி முன்னிலை வகித்தார். பொறுப்பாளர் ரோகன் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் மோகன் வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் அப்துல் கலாம் உறுதிமொழி மாணவர்களுக்கு கற்று கொடுக்கப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டு, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. கடலாடி ஒன்றிய பொறுப்பாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

Tags : Knowledge Competition ,DeviBattinam ,
× RELATED மாணவர்களுக்கு அறிவுத்திறன் போட்டி