×

ஆந்திராவில் நடந்த போட்டியில் தொண்டி புறா முதலிடம்

தொண்டி, ஜன.28:  ஆந்திராவில் நடந்த புறா பந்தயத்தில் 533 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து தொண்டி புறா முதலிடம் பிடித்தது. ஆந்திரா மாநிலம் நெல்லூரில் நேற்று முன்தினம் புறா பந்தயம் நடைபெற்றது. போட்டியில் ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த புறாக்கள் கலந்து கொண்டது. இதில் தொண்டியை சேர்ந்த சாகுல் ஹக் என்பவரின் புறா 533 கிலா மீட்டர் தூரத்தை 7 மணி நேரத்தில் கடந்து முதலிடம்பிடித்து. இது குறித்து சாகுல்ஹக் கூறுகையில், ‘நெல்லூரில் நடைபெற்ற போட்டியில் நூற்றுக்கணக்கான புறாக்கள் கலந்துகொண்டது. ஒவ்வொரு புறாவின் காலிலும் சிப் ஒன்று கட்டப்படும். அதன் மூலமாக புறா பறந்து செல்லும் திசை, அடையும் இடம், நேரம் உள்ளிட்டவை துல்லியமாக தெரியும். இதில் எனது புறா 7 மணி நேரத்தில் போட்டி தூரத்தை கடந்து முதலிடம் பிடித்துள்ளது’ என்றார்.

Tags : Tandi Pigeon ,Andhra Pradesh ,
× RELATED ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் மீது கொடூர தாக்குதல்